மீஞ்சூர், ஆக. 23 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள டிவிஎஸ் அரசு மேல்நிலை பள்ளியில்  11,மற்றும் 12,வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், மாவட்ட கல்வி அலுவலர் முகமது அப்துல்லா, துணை தலைவர் அலெக்சாண்டர்,துனை தலைமை ஆசிரியர் கே.சுசிலா, உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் தலைமையாசிரியர் ராமமூர்த்தி நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து. வரவேற்புரை நிகழ்த்தினார்.

மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு 149 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கினார்,

இவ்விழாவில் முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சுப்ரமணி, ராஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள் துரைவேல் பாண்டியன், அபுபக்கர், கவிதா சங்கர், கவிதா சேகர், பரிமளா அருண் குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் புருஷோத்தமன், நந்தகுமார், ராமமூர்த்தி, குருசாலமன், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here