திருவள்ளூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஒவ்வொரு தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுவது வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெறுவோம் என்பதை காட்டுகிறது எனவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை 200 விதமான வழிகளில் முறைகேடு செய்ய முடியும் எனவும் பாஜக அரசுக்கு தைரியம் இருந்தால் பழைய முறையிலான வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பின் போது, பேட்டி அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரம்பாக்கம் பகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் சதீஷ்குமாரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது,
நாடாளுமன்ற கடைசி கூட்டுத் தொடர் முடிவு நாளில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ததாகவும், அதில் மக்களுக்கான நலத்திட்டங்கள் ஒன்றுமே இல்லாமல் இருந்தது. தமக்கு ஏமாற்றத்தை தந்ததாகவும் மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் ராமர் கோயில் பற்றியும் காங்கிரஸ் கட்சி என்ன தவறுகள் செய்தது என்பது பற்றி மட்டுமே பேசினார்கள்.
மக்களுக்கான அவர்கள் செய்த உபயோகமான எந்த திட்டத்தையும் அவர்களால் கூற முடியவில்லை என்றும், தேர்தல் வாக்குறுதியான கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் கொடுப்போம், ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் உள்ளிட்ட அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் இதுவரை அவர்கள் நிறைவேற்றவில்லை என்றார் அவர்.
மேலும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் மேடைக்கு மேடை பேசும்போது வருகின்ற எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் மீண்டும் வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடிப்போம் என்றவாறு ஒருமித்தக் கருத்தோடு இருவரும் பேசி வருவதெனெபது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுள்ளு செய்து பெறப்போகும் வெற்றி தானே ஏன் குறைத்துச் சொல்கின்றேர்கள் 450 தொகுதிகள் என்றுக்கூட சொல்லிக் கொள்ளுங்கள் என நான் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மேலும் அவர் கூறும் போது, இன்றைய நாளிதழில் பார்க்கும்போது தேர்தல் நிதி பல லட்சம் கோடி வசூல் செய்திருப்பது பாஜக. கள்ளப் பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே பாஜகவுக்கு நிதி அளிப்பார்கள். அதேபோல் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்ற கொண்டு வரப்பட்டதே பண மதிப்பிழப்பு நடவடிக்கையாகும்.
வருகின்ற தேர்தலில் பணம் அதிக அளவில் விளையாடும் பாஜகவினர் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் ஆனால் வாக்களிப்பது நல்லவர்களுக்கு சிந்தித்து வாக்களியுங்கள் ஜனநாயகம் காக்கப்பட்டால் மட்டுமே நாம் சுதந்திரமாக நடமாட முடியும் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டால் மக்களின் சுதந்திரம் காணாமல் போய்விடும் என்றார்.
வருகின்ற தேர்தலில் வாக்குச்சீட்டை பயன்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது போல் காங்கிரஸ் தரப்பில் போராட்டம் நடைபெறவில்லையே என கேட்டதற்கு காங்கிரஸ் தரப்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம் இதுகுறித்து உரிய தீர்வு வழங்கும் என நம்புவதாக தெரிவித்தார்.




















