கும்பகோணம், ஜன. 10

கிருஷ்ணகிரியில் சமீபத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது சொத்துக்களை பிரிப்பதில் அவரது பிள்ளைகளுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது இரண்டு மகன்கள் வீட்டினுள் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பது குறித்து பார்த்த போது அங்கு இரண்டு பழங்கால ஐம்பொன் சிலைகள் இருப்பது தெரிய வந்தது. இவர்களிடத்தில் ஐம்பொன் சிலைகள் இருப்பதாக சிலைகள் கடத்தல் தடுப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கூடுதல் துணை கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் சென்ற  சிலை திருட்டு தடுப்பு காவல்துறையினர் 51 சென்டிமீட்டர் உயரம் உள்ள திருமால் சிலையையும், 42 சென்டிமீட்டர்  உயரமுள்ள திருமகள் சிலையையும் கைப்பற்றி கும்பகோணத்திற்கு கொண்டு வந்தனர் .

கைப்பற்றப்பட்ட இரண்டு உலோக சிலைகளில் திருமால் சிலையில் இருந்த 4 கைகளில் ஒரு கை அறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிலைகள்  மூலம் யாரோ? குற்றம் தொடர்பான செயலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே இந்த இரு சிலைகள் மீட்பு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட இரண்டு உலோக சிலைகளை சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here