திருவள்ளூர், ஆக. 03 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள கிராமம் சிறுவாபுரி இவ்வூரில் பிரிசித்துப் பெற்ற முருகன் கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு மாவட்டம் தாண்டி பல்வேறு இடங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை வழிப்பட்டு செல்கின்றனர். மேலும் செவ்வாய் கிழமைகளில் இக்கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகப்படியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இக்கோயில் அமைந்து இருப்பதோ சிறிய கிராமம் இதனால் அக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வருவதால் அக்கோயிலை சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும், அக்கோயிலைச் சுற்றி அவ்வூர் மக்கள் தற்காலிக சிறு கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருவதால் மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலின் கும்பாபிஷேகம் எதிர் வரும் 21 ஆம் தேதி ஞாயிறு அன்று நடைப்பெற உள்ளது. அந்நிகழ்வின் போது கட்டுக்கடங்காத விதமாக பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் அங்கு வரக்கூடும் எனவும் அதனால் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழும் என்பதை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு,

அப்பகுதியில் மக்கள் நெரிசலை தவிர்க்கும் வகையில் அப்பகுதியில் உள்ள குறிப்பாக கோயிலைச்சுற்றி அமைந்துள்ள தற்காலிக சிறு கடைகள் மற்றும் தடையூறாக கருதப்படும் இடங்களில் செயல்பட்டு வரும் கடைகளையும் தற்காலிகமாக அப்பகுதியில் இருந்து அகற்றி இவ்விழா சிறப்பாக நாடைப்பெறுவதற்கான துரித நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக தற்காலிக சிறுகடை வியாபாரிகளை அழைத்து கோட்டாட்சியர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான அப்பகுதி சிறு வியாபாரிகள் பங்கேற்று, தங்கள் கருத்துக்களையும், கோரிக்கைகளையும்  கோட்டாட்சியரிடம் எடுத்துரைத்தனர். அதனைக் கேட்டு கொண்ட கோட்டாட்சியர் உயர் அலுவலர்களிடம் கலந்து ஆலோசித்து நல் முடிவை அனைவரும் சேர்ந்து எடுப்போம் எனத்தெரிவித்தார். இத்துடன் நல்லநிலையில் இக்கூட்டம் நிறைவுப்பெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here