பாபநாசம், மே. 19 –

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள கபிஸ்தலம் நகர திமுவினர் சார்பில், நேற்று திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் பங்கேற்ற திமுக கட்சியின் சிறப்பு பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதி சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும்,  சிறப்பு பேச்சாளர் உரை நிகழ்த்தும் போது திமுக தலைமையிலான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு கடந்த ஈராண்டு காலத்தில் செய்த பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விரிவாக உரைநிகழ்த்தினார்.

அதிலும் குறிப்பாக மகளிருக்கான விலையில்லா பேருந்து பயணத்தினால் அம் மகளிரின் வாழ்வதாரத்திற்கு எவ்வளவு பயன் உள்ளதாக இருக்கிறது எனவும், மேலும் மகளிர் சுயவுதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி, மேலும் கடனுதவி கூட்டுறவு சங்க வங்கிகளில் செய்யப்பட்டுள்ள கடன் தள்ளுபடி, மேலும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர கல்வி தொகை, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரும் திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், போன்ற பல்வேறு திட்டங்களினால் பயன் பற்றோர் குறித்தும் மிக விரிவாக விளக்கிக்கூறி சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் திமுக ஒன்றியம், பகுதி மற்றும் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட திரளான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here