சென்னை, ஆக. 21 –
தமிழ்நாட்டில் தற்போது நடை முறையில் உள்ள ஊரடங்கு வரும் ஆக 23 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மாவட்ட வாரியாக நோய்த்தொற்று பரவலின் தன்மை அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம் ஊரடங்கு கட்டுப் பாடுகள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், சிறப்பு பணி அலுவலர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், பொதுத் துறை செயலாளர், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் , தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர், பேரிடர் மேலாண்மை இயக்குநர், பொது சுகாதாரத் துறை இயக்குநர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
இவ் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கொரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்த நீண்ட நேரம் விவாதிக்கப் பட்டு அக்கூட்டத்தில் எடுக்கப் பட்ட ஆலோசனைப் படி நடை முறையில் உள்ள கோவிட் -19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப் பாடுகள் மேலும் 2 வாரங்களுக்கு அதாவது செப் 6.2021 மாலை 6 மணிவரை நீடித்தல் என்ற முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
முன்பே அரசு அறிவித்தப்படி இன்று நடந்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன.
9,10,11 மற்றும் 12 வகுப்புகளுக்கு, சுழற்சி முறையில் வகுப்புகள்
செப் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் 9,10,11, மற்றும் 12 ஆம் வகுப்புகள் சழற்சி முறையில் செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும், அரசின் கோவிட் -19 தடுப்புக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின் பற்றி செயல்பட அனுமதிக்கப் படுகிறது.
மேலும் உயர் வகுப்புகள் செயல்பாடுகளை கவனித்து அதன் அடிப்படையில் மழலையர் வகுப்புகள் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளை செப் 15 ஆம் தேதிக்கு பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படுவதாக அக்கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அனுமதிக்கப் பட்ட செயல்பாடுகளுடன் பின் வரும் செயல் பாடுகளுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
கல்லூரிகள், பட்டயப்படிப்பு வகுப்புகள்
கல்லூரிகள் மற்றும் பட்டயப்படிப்பு ( டிப்ளோமா, பாலிடெக்னிக் ) வகுப்புகளும் சுழற்சி முறையில் செப் 1 முதல் செயல்படும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலர்கள் வழங்குவார்கள் மேலும் பணிப்புரியும் ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். என்ற உத்தரவும் அரசால் அறிவிக்கப் பட்டுள்ளது.
50 சதவீத பார்வையளர்களுடன் திரையரங்குகள்
50, சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் வரும் ஆக 23 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி, திரையரங்கப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அரசு வழிக்காட்டி நெறிமுறைகளையும் பின்பற்றப் படவேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடற்கரை செல்ல பொதுமக்களுக்கு அனுமதி
கடற்கரையில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதைப் போன்று உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்ங்கள் ஆகியவையும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின் பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுப்போன்று இதுவரை இரவு 9 மணி வரை அனுமதிக்கப் பட்டு வந்த அனைத்து கடைகளும் ஆக 23 முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப் படுகிறது. மேலும் தகவல் தொழில் நுட்பம் தகவல் நொழில் நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் நிலையா வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றி செயல் படவும் அரசு அனுமதி வழங்கிவுள்ளது. அதுப் போன்று அங்கன் வாடி மையங்கள் செப் 1 முதல் மதியவுணவு வழங்குவதற்காக அனுமதிக்கப் படும். அங்கன் வாடி மைய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
வெளி மாநிலத்திற்கு அரசு பொதுப் போக்கு வரத்து சேவை அனுமதி
ஆந்திரா கர்நடாக மாநிலங்களுக்கு பொது போக்குவரத்து சேவை செயல்பட அனுமதி. மழலையர் காப்பகங்களுக்கு அனுமதி, நீச்சல் குளங்களில் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி பயிற்சியளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுப் போன்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப் படும் வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகளுக்கு அனுமதி. மேலும் தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் எஃப் எல் 2, எஃப் எல் 3 செயல்பட அனுமதிக்கப் படுகிறது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவாசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப் பட அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவாசியப் பொருட்கள் வழங்குதல் தவிர இதர செயல்படாகளுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் அரசின் கொரோனா தடுப்ப முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் கொரோனா தொற்று பரவல் நம் மாநிலத்தில் இல்லாத நிலையை உருவாக்கிட வேண்டுமெனவும் அரசு சார்பில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்படி விதிமுறைகளை பின் பற்றாமலும் அனுமதிக்கப் பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கயாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.