பூவிருந்தவல்லி, ஆக. 21 –
செய்தி சேகரிப்பு தமிழலை ஆனந்த்
திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் பூவிருந்தவல்லி நகரம் குமனஞ்சாவடியில் அச்சிரம்பாக்கம் வஜ்ரகிரி மலை கிருஸ்துவர்களாள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதை உடனடியாக அவர்களிடம் இருந்து மீட்டு இந்துக்களிடம்ஒப்படைக்க வேண்டும் என்பதனை தமிழக அரசுக்கு வழியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் இந்து முன்னணியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் ரவிந்திரன் மற்றும் சென்னை மாநகர செய்தி தொடர்பாளர் இள.கனேசன் சிறப்புரை ஆற்றினர். இவ் ஆர்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் போஸ் பா. ராஜூ மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் போஸ் ராஜ் தலைமை தாங்கினர். இதில் சங்க பரிவார அமைப்புகளை சார்ந்த மாவட்ட ஓன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் விவசாய அணி பொதுச்செயலாளர் பூவை காளியப்பன் ஆவடி திருநின்றவூர் பூவிருந்தவல்லி திருவேற்காடு பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கண்டனத்தை தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.