சென்னை சோழிங்கநல்லூரில் திருடுபோன கழிவுநீர் லாரியை சுமார் ஆயிர த்திற்கும் மேலான சிசிடிவி கேமரவை ஆராய்ந்து காணாமல் போன கழிவு நீர் அகற்றும் வாகனத்தை, தனிப்படை போலீசார் திருப்பூரில் மீட்டுள்ளனர். வாகனத்தை திருடிய நபர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாடியை புறக்கணித்து கிரமங்களில் புகுந்து சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு லாரியை கடத்தி சென்றுள்ளனர். இதனை திறம்பட கையாண்டு வாகனத்தை மீட்டெடுத்து திருடர்களை கைது செய்த தனிப்படை காவலர்களை உயர் அலுவலர்கள் வெகுவாக பாராட்டினர். 

செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். ப.வினோத் கண்ணன்

சென்னை, ஆக. 22 –

சென்னை சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர். சாலையில் வசித்து வருபவர் பரசுராமன் இவருடைய மனைவி கவிதா அவரது பெயரில் வாங்கப் பட்டுள்ள கழிவுநீர் அகற்றும் லாரியை கடந்த  9 ஆம் தேதி அன்று காலை அவர்கள் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்துவுள்ளனர். இந்நிலையில் மறு நாள் காலையில் பார்க்கும் போது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த கழிவுநீர் அகற்றும் லாரி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து, பின்னர் அருகில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஆய்வாளர் சீனிவாசனிடம் பரமசிவம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆராய்ந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் காணாமல் போனதாக கூறும் கழிவுநீர் அகற்றும் லாரியை எடுத்து சென்றது தெரிய வந்தது. பின்னர் இப் புகார்  குறித்து துரைப்பாக்கம் உதவி ஆணையர் ரவி அவர்களின் உத்தரவின் பேரில் செம்மஞ்சேரி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஜமீஸ்பாபு, தலைமை காவலர்கள் புஷ்பராஜ், தாமோதரன், காவலர்கள் சிங்காரவேலன், வினோத், கண்ணன், பவித்ரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து, 

திருடுபோன ஒரிஜனல் கழிவுநீர் அகற்றும் லாரி

திருடர்களால் வர்ணம் மாற்றப் பட்ட கழிவுநீர் அகற்றும் லாரி

தனிப்படை போலீசார் சோழிங்க நல்லூரிலிருந்து திருடப்பட்ட லாரி எந்த வழியாக சென்றது என்பதை கண்டறிய ஓ.எம்.ஆர். சாலையில் செயல்பட்டு வரும் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய துவங்கினர். அதில், ஓ.எம்.ஆர். வழியாக செங்கல்பட்டு மாவட்டத்தை நோக்கி நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியை கடந்து சென்றதை தொடர்ந்து லாரி சென்ற வழி யெங்கும் உள்ள சிசிடிவி கேமாராவை ஆராய்ந்து கொண்டே சென்ற போலீசார் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், வந்தவாசி, திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, அரூர், சேலம் ஆத்தூர், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி, பவானி, பெருந்துறை, பெருமாநல்லூர் என சுமார் 1000க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமராவை கண்காணித்து சென்றதில் கடைசியாக திருப்பூர் மாவட்டத்தை அடைந்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் சரலக்காடு என்ற ஒரு கிராமத்தில் உள்ள தென்னந் தோப்பில் லாரியை நிறுத்தி வைத்திருந்ததை தனிப்படை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். லாரியின் முன் பகுதியில் வரைந்திருந்த வர்ணத்தை மாற்றி லாரிக்கு வேறு வர்ணம் அடித்துள்ளதை கண்டு அதிர்ச்சிவுற்ற அவர்களுக்கு  மேலும் ஒரு அதிர்ச்சி வாகன பதிவு எண்ணையும் மாற்றி சம்மந்தமே இல்லாத பதிவு எண்ணை பொறுத்தியுள்ளதுதான். 

பின்னர் அங்கிருந்த திருடப்பட்ட கழிவுநீர் அகற்றும் லாரியை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தும், லாரியை திருடி சென்ற இருவரையும் கைது செய்து சென்னை செம்மஞ்சேரி காவல் நிலையம் அழைத்து வந்தனர். 

காவல் நிலையத்தில் வைத்து இருவரிடம் நடத்திய விசாரணையில் லாரியை திருடியவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 55 வயதான வேணுகோபால், அவருடைய தம்பி மகன் 25 வயதான தினேஷ்குமார் என்பதும் தெரியவந்தது. 

இருவர் மீதும் பன்ருட்டியில் 7 லாரிகள் திருடிய வழக்கும், தாம்பரத்தில் ஒரு லாரி திருடிய வழக்கும், போரூர் ஆட்டோவில் சென்று இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கும், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதியில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. 

சென்னையிலிருந்து திருப்பூர் வரை சுமார் 1000க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராவின் பதிவுக் காட்சிகளை ஆராய்ந்து காணாமல் போன லாரியை விரைந்து கண்டுபிடித்த   துரைப்பாக்கம் உதவி ஆணையர் ரவி அவர்களின் உத்தரவின் பேரில் செம்மஞ்சேரி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஜமீஸ்பாபு, தலைமை காவலர்கள் புஷ்பராஜ், தாமோதரன், காவலர்கள் சிங்காரவேலன், வினோத், கண்ணன், பவித்ரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை குழுவினர்க்கு காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி திறம்பட செயல் பட்டதற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here