மீஞ்சூர், ஏப். 08 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி, மெதூர், கோளூர், தேவம்பட்டு, அண்ணாமலை சேரி, திருப்பாலைவனம், பழவேற்காடு, வஞ்சிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு திறந்த வெளி வாகனத்தின் மூலம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அண்ணாமலைச்சேரி மற்றும் பழவேற்காடு மீனவ மக்களிடையே இந்தியா கூட்டணியின் வாக்குறுதிகளாக மீனவர்களுக்கான தனி கூட்டுறவு வங்கி, மீனவர்களுக்கான கிசான் அடையாள அட்டை, 150 நாள் வேலை உறுதி திட்டம் மற்றும் அதற்கு 400 ரூபாய் உறுதித்தொகை, மீனவர்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் தொகுப்பு வீடு உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி, அவர் வாக்கு சேகரித்த போது மீனவ மக்கள் உற்சாகமாக கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

அவருடன் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகர், திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜன் உள்ளிட்ட ஏராளமான திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here