தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகை முயற்சிகளையும் மேற் கொள்ளும் படி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சென்னை, ஜூலை 27-2021 –
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று ஜூலை 27-2021 நடைப்பெற்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமையேற்று நடந்திய முதல்வர் தமிழ் வளர்ச்சி இயக்கம், தமிழ் பல்கலைக்கழகம், மதுரை – உலகத்தமிழ் சங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன்ம, செய்தி மக்கள் தொடர்புத்துறை, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆகியவற்றில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், முன்மொழிவுகள் மற்றும் புதிய திட்டப் பணிகள் ஆகியவைக்குறித்து ஆய்வு நடத்தினார்.
இக்கூட்டத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதோடு,அயல்நாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் வாழும் தமிழர்களிடையே தமிழ்ப் பயன்பாட்டினைப் பரவலாக்கும் வகையில் புதிய முயற்சிகளை நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் தொழில் நுட்பக் கல்வி உட்பட உயர்கல்விகளுக்கு தேவையான பல்வேறு கலைச்சொற்களை உருவாக்குதல்,தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட அக்டோபர் திங்கள் 12 ஆம் நாளினைச் செம்மொழி தமிழ் நாளாக அறிவித்தல், திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க ஒன்றிய அரசைத் தொடந்து வலியுறுத்தல், உலமெங்கிலும் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளைத் தொடர்ந்து நிறுவுதல், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் தமிழின் பயன்பாட்டினை அதிகரிப்பது உள்ளிட்டவைக் குறித்தும் ஆய்வு மேற் கொண்டார்.
எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் சுமார் 800 இருக்கைகள் கொண்ட திரையங்குடன் கூடிய புதிய கலையரங்கம் அமைத்தல், பதிய டிஜிட்டல் நூலகம் அமைத்தல், இந்நிறுவனத்தில் திரைப்படம் தொடர்பான பழைய கருவிகள்க் காட்சிப்படுத்துகின்ற வகையில் அருங்காட்சியகம் அமைப்பது குறித்தும், நினைவு மண்டபங்கள் மணி மண்டபங்களில் ஒலி ஒளி காட்சி அமைப்பது, அதனை 360 கோணப் பரிமானத்தில் துறையின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும் விவாதம் நடைப்பெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்கும் விழாக்கள் மற்றும் அரசின் திட்டங்கள், விழிப்புணர்வு செய்திகள், சாதனைகள், நலத்திட்ட உதவிகள் தொடர்பான செய்தி வெளியீடுகள் மற்றும் குறும்படங்களைச் சமூக ஊடகங்களான பேஸ் புக், ட்வீட்டர்,வாட்சாப்,இன்ஸ்டாகிராம்,யுடியூப் ஆகியவற்றில் வெளியிடுவது குறித்தும் ஆலோசிக்கப் பட்டது.
எழுது பொருள் மற்றும் அச்சுத்துறையின் அரசு மைய அச்சகத்தில் காகித கிடங்கு அமைப்பது குறித்தும், அரசு அச்சகத் தொழிலாளர்க்குக் குடியிருப்புகளும், சமூதாயக் கூடமும் கட்டுவது குறித்தும், கழிவுக் காகிதச் சேமிப்புக் கிடங்கு கட்டுவது குறித்தும் ஆலோசிக்கப் பட்டது.
இந்த ஆய்வுக் கூடத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் செயலாளர் மகேசன் காசிராஜன், எழுதுப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் ஆணையர் ஏ.சுகந்தி,செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் எஸ்.சரவணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.