திருவள்ளூர், ஜூன். 17 –

திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில்  கடந்த ஏப் 19-2022 தேதியன்று, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கு 2 ல் நடைப்பெற்றது.

இப்போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்ற பள்ளிக் கல்லூரி மாணாக்கர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இப்பேச்சு போட்டியில் வெற்றிப் பெற்ற மாணாக்கர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.5 ஆயிரம், இரண்டாம் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ.3 ஆயிரம் மற்றும் மூன்றாம் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ. 2 ஆயிரம் மேலும் சிப்பு பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் என வழங்கப்பட்டது.

இதில் பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் வெற்றிப் பெற்ற புழல் அரசு மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி த. கீர்த்திக்காவுக்கும், இரண்டாம் இடத்தைப் பிடித்த புன்னப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் லி.வினோத்குமாருக்கும், மூன்றாம் இடத்தைப்பிடித்த காக்களூர் சி.சி.சி. மெட்ரிக் மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஷெக்கினாஷேரன் மேரிக்கும் வழங்கப்பட்டது. மேலும் அரசுப்பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் கொமக்கம்பேடு, அரசு உயர் நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி இர.கோபிகா, பழைய  பயிலும் அலமாதி, அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ப.ராதிகா ஆகியோர்க்கு வழங்கப்பட்டது.

மேலும், கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்பேட்டியில் முதல் பரிசினை பட்டாபிராம் இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவி வை.ராகவியும், இரண்டாம் பரிசினை பட்டாபிராம் ஆலீம் முகமது சாலிக் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ர.பிரியதர்ஷினியும், மூன்றாம் பரிசினை வேப்பம்பட்டு, ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி மு.மஞ்சுளாவும் பெற்றனர் இவர்கள் அனைவருக்கும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டுச் சான்றிதழையும், பரித்தொகைக்கான காசோலையையும் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சீ.சந்தானலட்சுமி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here