கும்பகோணம், ஜூன். 22 –

கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள 9 அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் 40 பேருக்கு, கல்வி ஊக்கத்தொகையாக ரூபாய் 3 லட்சத்தி 8 ஆயிரத்தை மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவன கிளையின் சார்பில் முதல் ஆண்டாக அந்நிறுவனத்தின் சார்பில் கூட்டு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வழங்கியது. வரும் ஆண்டுகளில், கூடுதல் மாணவியர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும் என நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கும்பகோணத்தில் மலபார் கோல்டு அண்டு டைமண்டஸ் நிறுவனத்தின் கும்பகோணம் கிளையின் சார்பில், கூட்டு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், 9 அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த 40 மாணவியர்களுக்கு ரூபாய் 3 லட்சத்தி 8 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகையினை மகாமக குளம் அருகேயுள்ள ஹரிதா மஹாலில்  கிளையின் தலைவர் மாஹின் அப்துல் ரசாக் தலைமையிலும், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் முன்னிலையிலும் நேற்று நடைபெற்ற எளிய விழாவில், சிறப்பு விருந்தினர்களாக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் சு ப தமிழழகன், ராயாஸ் குரூப் தலைவர்  கோவிந்தராஜன் ஆகியோர் பங்கேற்று இக்கல்வி ஊக்கத்தொகையினை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், அந்நிறுவனத்தின் தஞ்சை கிளை தலைவர் ரின்சாத் பட்டர் காண்டி, கிளை மேலாளர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர், மலபார் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு, அதன் சமூக பொறுப்பு முன் முயற்சிகளும் காரணம், லாபத்தின் குறிப்பிட்ட சதவீதத்தை கல்வி, வீட்டு வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் ஆகிய சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்காக செலவிடுகிறது என்பது குறிப்பிடதக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here