தேனி; ஜூலை, தேனி மாவட்டம்,  ஆண்டிப்பட்டி நகர் பஸ் நிலையம் அருகே ஜவுளி கடை வைத்து நடத்தி வருபவர்  சரஸ்வதி (வயது 60).   நேற்று இவர் கடையில் தனியாக இருந்த போது 3 பெண்கள் துணிகள் வாங்குவது போல வந்து சற்று நேரத்திற்கு பின் திரும்பிச் சென்றுவுள்ளனர். அவர்கள் சென்ற பின் அவர்களுக்கு எடுத்துக்காட்டிய துணிகளை அடுக்கி வைக்க பார்த்த போது, அவற்றில் இருந்த 12  நைட்டிகளை பெண்கள் திருடி சென்றுவுள்ளனர். இதனை அறிந்து அதிர்ந்த கடை ஒனர் சரஸ்வதி கடையில் பொறுத்தியிருந்த சி.சி.டி.வி.கேமாரவை பாரத்த போது வந்த மூன்று பெண்கள் நைட்டிகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. உடனை அதுக் குறித்து  சரஸ்வதி ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து  போலீசார், விசாரணை நடத்தினர். ஆண்டிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான போலீசார் கடையில் பதிவாகி யிருந்த சிசிடிவி படக் காட்சிகளை ஆய்வு செய்த போது அப் பெண்கள் திருடியது உறுதியானது. அதன் அடிப்படையில் விசாரணை செய்ததில். திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன் பட்டியை சேர்ந்த செல்வி, ஈஸ்வரி, அங்கீஸ்வரி எனத் தெரியவந்தது. இதனையடுத்து காமயகவுண்டன்பட்டி சென்ற போலீசார் கர்ணன் மனைவி செல்வி (வயது36)  என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆண்டிப்பட்டி கடையில் திருடிய துணிகளை பறிமுதல் செய்தனர். மற்ற இரு பெண்களும் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த பெண்கள் மீது ஏற்கனவே சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் இதுப்போன்ற பல திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஜவுளி கடையில் சி.சி.டி.வி. பொருத்தப் பட்டு இருந்ததால் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய முடிந்தது, என்று ஆண்டிப்பட்டி போலீசார் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here