ஆவடி அருகே   ராட்சத குளிர் சாதன பழ கிடங்கில் பழங்கள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் பழ குவியல் நடுவே சிக்கி யிருந்த வட மாநில தொழி லாளியை 13 மணி நேர போராட்டத் திற்கு பின்பு மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

 

ஆவடி:ஏப்.30-

சென்னை ஆவடி அடுத்த மேட்டுப் பாளையத்தில் தனி யாருக்கு சொந்த மான ராட்சத குளிர் சாதன பழ கிடங்கு உள்ளது. இது இரண் டாயிரத்து ஐ நூறு டன் கொள்ளவு கொண்ட பழ கிடங் காகும். இந்த கிடங்கில்   வெளி நாடு மற்றும் வெளி மா நிலத்தில் இருந்து இறக்கு மதியாகும் ஆப்பில், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை இக் கிடங்கில் தேக்கி வைத்து பின்னர் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளுக்கு வியாபா ரத்துக்கு அனுப்பி வைக்கப் படுவது தினசரி நடை முறை யாகும்.

 

இந்த கிடங்கில் 10 க்கும் மேற் பட்ட வட மாநில இளைஞர்கள் வேலை செய்து வரு கின்றனர். இந்த நிலையில் நேற்று கிடங்கில்  போர்க் லிப்ட் இயந்திர வாகனத்தின் மூலம் பழங்களை அடுக்கும் பணியில்  ஹாரிப் /23, ஜாருல் /24, சையது அக் /22, ஹயத்துல் அக் /20 ஆகிய நான்கு பேர் ஈடு பட்டு இருந்தனர். அப்போது திடீரென பழ பெட்டிகள் சரிந்தன. இதில் பணியில் இருந்த 4 பேரும் விபத்தில் சிக்கி கொண்டனர். பின்னர் கிடங்கின் வெளியே இருந்த தொழி லாளிகள் உள்ளே இருந்த வர்களை மீட்க நீண்ட நேரம் போராடினார். ஆனால் கிடங்கின் நுழை வாயில் முழு வதுமாக மூடி யிருந்ததால் தொழி லாளிகளை மீட்க முடிய வில்லை. பின்னர்   சுவற்றை துளையிட்டு மூன்று தொழி லாளியை மீட்டனர். ஆனால் எஞ்சிய ஒரு தொழி லாளியான ஹயத் துல் அக்கை அவர் களால் மீட்க முடிய வில்லை. இதனை அடுத்து காவல் துறை யினருக்கும், மீட்பு படை யினருக்கும் தகவல் அளிக்கப் பட்டது.

 

 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சென்னை புறநகர்  மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை அலுவலர் சரவணன் தலைமையில் பூவிருந்த வல்லி, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதி களிலிருந்து வந்து மீட்புப் பணியில் ஈடுப் பட்டனர்.

 

ஆனால் கிடங்கில் இருந்து பல டன் பழங்கள் நிரப்பி வைத் திருந்த அட்டை மற்றும் மரப்  பெட்டிகள் விழுந்து அதிலுள்ள பழங்கள் சிதறி கிடந்ததால் ஹயத்துல் அக்கை மீட்க சிக்கல் ஏற்பட்டது. இதனை அடுத்து ஜே.சி.பி இயந்திரம் வர வழைக்கப் பட்டு பல்வேறு மீட்ப பணி வழி முறைகளை கை யாண்டனர். ஆனால் அது பலன் அளிக்கா ததால் கிரைன் மூலம் நுழை வாயிலை உடைத்து பின்னர் விடிய, விடிய மீட்பு படையினர் போராடினர். இறுதியாக காலை 9 மணி யளவில் வட மாநில தொழிலாளியை பத்திரமாக மீட்டனர். இதனை அடுத்து மீட்கப் பட்ட தொழிலாளிக்கு முதலுதவி செய்து சிகிச்சைக் காக கே.எம்.சி. மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இத னிடையே விபத்து குறித்து வருவாய் துறை யினரும், காவல் துறை யினரும்  கிடங்கின் உரிமையாளர் சுரேஷிடம் விசாரணை மேற் கொண்டு வரு கின்றனர். இவ் விப த்துக்கான காரணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந் நிலையில் முதற் கட்ட தகவல் ஆய்வில் அதிக எடை ஏற்றி வைக்கப் பட்டு இருந்ததால் இவ் விபத்து நடந் திருக்கலாம் என கூறப் படுகின்றது. அதே போல் இந்த விபத்தில் 2 கோடி மதிப் பிலான 540 டன் எடை யிலான பழங்கள் சேத மடைந்தது. என்பது குறிப் பிட தக்க தாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here