திருவாரூர், ஏப். 13 –

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூர்  ஊராட்சிக்குட்பட்ட காவலக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயது மதிக்கதக்க சிலம்பரசன் என்பவர். மேலும் இவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

மேலும் இவருக்கு திருமணமாகி உமாபாரதி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். மேலும், சிலம்பரசன் தனது குடும்பச் செலவிற்காக அதே பகுதியைச் சேர்ந்த துரை என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கடனாக வட்டிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சிலம்பரசன் அத்தனிநபரிடம் வட்டிக்கு கடனாக வாங்கிய தொகையில் சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை வட்டியுடன் திரும்ப செலுத்தியுள்ளதாகவும், மேற்கொண்டு அந்நபருக்கு ரூ. 50 ஆயிரம் மட்டுமே திரும்ப செலுத்த வேண்டிய நிலையில், அந்நபர் சிலம்பரசனிடம் மேலும் நீ ரூ. 2 லட்ச ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என அவரை மிரட்டியதாகவும்,

மேலும் தொடர்ந்து சிலம்பரசனின் வீட்டிற்கு சென்று அடித்து தகராறில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. அதனைத்தொடர்ந்து சிலம்பரசன் கடந்த இருதினங்களுக்கு முன்பு கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை அப்புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், இந்நிலையில் இன்று காலை அக்காவல் நிலையப் போலீசார் துரைக்கு ஆதரவாக பேசியதாகவும் தகவல் தெரிய வருகிறது. இதனால் மனமுடைந்த சிலம்பரசன் திடீரென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, தனது குடும்பத்தினருடன் சென்று, தான் மறைத்து வைத்திருந்த கிரோசினை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுவுள்ளார்.

உடனடியாக அருகே இருந்த போலீசார் சாமர்த்தியமாக அவரது உடலில் இருந்த துணிகளை அகற்றியும் சிலம்பரசன் மீது தண்ணீரை ஊற்றியும் தீயை அணைத்து உள்ளனர். மேலும் உடனடியாக அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவத்தின் போது அவருடன் வந்த குடும்பத்தினர் மற்றும் அவரது குழந்தைகளின் அலறல் சத்தத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here