சென்னை, செப். 9 –
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்து சமய பெரு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரிங்கி . கி.இராமசுப்பிரமணி குறிப்பிட்டள்ள அச் செய்திக்குறிப்பில் நாளை இந்துக்கள் பண்டிகையின் முதல் பண்டிகையான முதற் கடவுள் விநாயக பெருமானின் சதுர்த்திப் பண்டிகையாகும். அதனை கொண்டாட இருக்கும் தமிழக மற்றும் தேசம் கடந்து வாழும் இந்து சமய பெரும் மக்களுக்கு தனது சார்பாகவும் ஜெய் சிவசேனா இயக்கத்தின் சார்பிலும் வாழ்த்துக்களை அதில் தெரிவித்து உள்ளார். மேலும் அப் பண்டிகையை முன்னிட்டு 1008 ஒரு அடி வினாயகர் சிலைகளை இந்துக்களின் இல்லம் தேடி இலவசமாக கொடுக்கும் சேவையை தங்கள் இயக்கத்தின் சார்பாக தனித்தனியாக சென்று வழங்குவதாக தெரிவித்துள்ளார். அதைப் போன்று தனது ஆசானும் ஜெய் சிவ சேனா வின் மறைந்த தலைமை ஒருங்கிணப்பாளர் ஆர். குமாரராஜா அவர்கள் நடப்பு ஆண்டில் சில மாதங்களுக்கு முன் காலமானதால் இவ் வருடம் கடந்த ஆண்டுகளைப் போல் இந்த வருட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை சிறப்பாக கொண்டாடுவதில்லை எனவும் உறுப்பினர்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஆதலால் அன்பர்கள் அனைவரும் அவரவர் இல்லங்களில் சிறப்பாக கொண்டாட கேட்டுக் கொள்வதோடு, மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக் கொண்டு விநாயகரின் அருளால் எல்லோர் வீடுகளிலும் எல்லா வளமும் பெருகட்டும் எனக் கூறிவுள்ளார்.