தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 10 இலட்சம் பனை விதைகளை நடும் சமுதாயப் பணியை இன்று ஏற்பாடு செய்த நிலையில் அக்கட்சி தொண்டர்கள் விறுவிறுப்பான சமுதாய பணி செயல்களில் தமிழகம் முழுவதும் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தேனி; செப், 09 – இந் நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி கண்மாயில் சுற்றுச் சூழல் பாதுகாப்பை முன்னிட்டும் மழைக் காலங்களில் பனைமரம் பூமியில் ஆயிரம் அடிக்கு கீழ் நீரை தேக்கி வைக்கும் திறன் அப்பனைக்கு உண்டென்பதாலும், இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பனை விதைகளை நாம்தமிழர் கட்சியின் செயலாளர் இளஞ்சேரலாதன் தலைமையிலான அக்கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் மக்கள் சட்ட உரிமை இயக்கம் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமையிலும் பனை விதை நடும் சமூகப் பணி நடைப்பெற்றது. துணைச் செயலாளர் பார்த்திபன், சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் லட்சுமணன், இளைஞர் பாசறை பொறுப்பாளர்கள், இளைஞர் பாசறை மாணவர்கள் ஆகியோரும் இப்பணியில் ஈடுபட்டனர்.