தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பழைய மாணாக்கர்கள் சங்கம் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் ஆசிரியர் தின 10ம் ஆண்டு விழா G.சுவாமிநாதன் பழைய மாணாக்கர்கள் சங்க தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் V. பாஸ்கரன் மற்றும் தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் k.ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினார்களாக பங்கேற்று விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.
இந் நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு மேஜை வழங்குதல், மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குதல், சிறந்த ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பழைய மாணவர் சங்கத்தினர் சார்பில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு கழிப்பறை, தண்ணீர் வசதி, டைல்ஸ் கற்கள் பதித்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தனர்.
தில்லை நடராஜன் பழைய மாணவர் சங்க செயலாளர் வரவேற்புரை அளித்தார். திருநாவுக்கரசு மாவட்ட கல்வி அலுவலர் பெரியகுளம் வாழ்த்துரை வழங்கினார். சமுதாய அக்கறையுடன் பணியாற்றி வரும் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் தேனி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் இருவருக்கும் பழைய மாணவர் சங்க தலைவர் சுவாமிநாதன் நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.