காஞ்சிபுரம், ஜன. 03 –
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ள மலையாங்குளம் கிராமத்தில் 178 இருளர் இன குடும்பங்களுக்கு, தமிழக அரசின் சார்பில் ரூ 8 கோடியே 22 லட்சத்தில் தொகுப்பு வீடுகள் கட்டும் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அக்கட்டுமான பணியினை ஆதிதிராவிடர் நலத்துறை மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன் அமைச்சர் கயல்விழி நேரில் சென்று அப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அவ்ஆய்வின் போது, கட்டுமான பணிகள் குறித்தும், அதன் தரம் குறித்தும், கேட்டறிந்தார். மேலும் கட்டுமானப் பணிகளை தரமானதாகவும் விரைந்து முடிக்கவும் அப்போது அவர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது, உடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி, காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ, காஞ்சி எம்.பி. செல்வம்., ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், பேரூராட்சி தலைவர் பொன்.சசிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகாந்திமுரளி கார்த்திக் உட்பட அரசு அலுவலர்கள் என பலர் இருந்தனர்.
























