திருவேற்காடு, ஏப். 19 –

சென்னை அடுத்துள்ள திருவேற்காடு திருவெங்கட நகர் பகுதியில் குட்கா பதுக்கி வைக்க பிரத்தியேகமாக இரும்பு ஷெட் அமைத்து பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நபர் குறித்து தனிப்படை போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு 2 மணியளவில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டதில் சுமார் 200 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஆறுமுகம் என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருவேற்காடு உள்ளூர் போலீசார் கண்டுகொள்ளாத நிலையில் ஆவடி காவல் மாவட்ட துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here