கும்பகோணம், செப். 01 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்காவில், கூட்டு குடிநீர் திட்ட பணியினை துவங்க எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் தொடர்ந்து, அப்பகுதியில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் மேலும் பதட்டம் நிலவியது.
கும்பகோணம் மாநகரம் அருகிலும், பாபநாசத்திற்கு அடுத்துள்ள கொள்ளிடம் ஆற்றில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ. 1752 கோடி மதிப்பீட்டில் வீரமாங்குடி சறுக்கை வாழ்க்கை ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தினை துவங்க எதிர்ப்பு தெரிவித்து, சருக்கை பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கதவணை திட்டத்தை அரசு செயல்படுத்தி துவங்கிய பின்பு, கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கினால்தான், பாபநாசம் சுற்றளவை பொருத்தவரை சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் உயரும் எனவும்,
மேலும் அதற்கு மாறாக கதவனைத் திட்டத்தை துவங்காமல், கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டால் டெல்டா மாவட்டம் வறண்ட பூமியாக மாறிவிடும் எனவும், தொடர்ந்து, உடனடியாக அரசு கதவனை செயல் திட்டத்திற்கான ஆணைப்பிறப்பித்திட வேண்டுமெனவும், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், தலைமையில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக 28 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகளிடம் கோட்டாட்சியர் பூர்ணிமா, தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கோட்டாட்சியர் விவசாயிகளிடம் வரும் நிதியாண்டில் கதவனை திட்டம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
அதனால் அவர்கள் இருவர்களிடையே நடைப்பெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டு, விவசாயிகள் அப்போராட்டத்தைக் கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர் அதனால் அப்பகுதியில் நிலவி வந்த பதட்டம் மற்றும் பரபரப்பு விலகி அமைதியான சூழல் ஏற்பட்டது.



















