சென்னை, ஏப். 29 –

நேற்று சட்டமன்றத்தில் நடைப்பெற்ற வணிகவரி மற்றும் பதிவுத்துறை துறையின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்தில் அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாளன்று பதிவுப்பணியை மேற்கொள்ளும் வகையில் சார் பதிவாளர் அலுவலங்கள் சனிக்கிழமைகளிலும் செயல் படும் என்ற அறிவிப்பினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் வெளியிட்டார்.

இந்த அறிவிப்பிற்கிணங்க மாநிலத்தில் அதிகமாக பதிவு மேற்கொள்ளப்படும் 100 அலுவலகங்கள் வாரயிறுதி நாளான சனிக்கிழமைகளில் இயங்கும் வகையிலும் அவ்வாறு இயங்கும் அலுவலகங்களில் மேற் கொள்ளப்படும் பதிவுகளுக்கு கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும் என்றும், இதனால் ஏற்படும் கூடுதல் பனிச்சுமை மற்றும் பணியாளர்களது நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சனிக்கிழமை பணிநாளை ஈடு செய்யும் விதமாக வாரநாட்களில் வேலை குறைந்த ஏதேனும் ஒருநாளில் விடுப்பு வழங்கிட ஏதுவாக உரிய மாற்று ஏற்பாடு செய்யும் வகையிலும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் அமைச்சர் சட்டமன்ற பேரவையில் அறிவிப்பு செய்த நேற்றேய தினமே அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here