கும்பகோணம், ஜூலை. 27 –

தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டணம், சொத்து வரி, மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களைக் கண்டித்து அரசுக்கு எதிராக கும்பகோணத்தில் அதிமுக வினர் கைகளில் அரிக்கன் விளக்கை ஏந்தி  காந்தி பூங்கா முன்பு மாவட்ட அவைத் தலைவர்  ராம்குமார் தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் மாநகரச் செயலாளர் ராமநாதன் முன்னாள் மயிலாடுதுறை  பாராளுமன்ற உறுப்பினர்  பாரதிமோகன் ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன் அசோக்குமார் முத்துகிருஷ்ணன் கருணாநிதி உட்பட ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமநாதன் ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேரை ஏமாற்றக்கூடிய வல்லமை படைத்தவர்கள் முன்னாள் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் தான் என்றும் அப்படி ஏமாந்தவர்களில்  நானும் ஒருவன் என்று தெரிவித்தார். அதேபோன்று சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் அவர்கள் துளியும் பிரயோஜனம் இல்லாத கான்கிரீட், பேனாவிற்கு 80 கோடி  செலவு செய்யும் தமிழக அரசு, பசியை போக்கும் விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் நிலையத்திற்கு மேற்கூரை அமைத்துக் கொடுக்கலாம் என்றார். மேலும், நெல் குவிண்டாலுக்கு ரூ 2500 என்றும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ 4500 என கொள்முதல் செய்வோம் என்று தெரிவித்தவர்கள் இதுவரை செய்யவில்லை என்றார். தொடர்ந்து மகளிருக்கு 1000 ரூபாய் தரவும் இல்லை 100 நாட்களில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக ஆக்குவேன் என்று சொன்னார்கள் செய்தார்களா ? என கூட்டத்தினரைப் பார்த்து கேள்வியெழுப்பினார்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா மினி கிளினிக் திட்டம், அம்மா உணவகம் போன்ற மக்களுக்கு பயன்பெறக்கூடிய திட்டங்களை அனைத்தையும் இந்த திமுக அரசு நிறுத்தி உள்ளனர். இதுவரை நெல்லைக் கூட சரிவர கொள்முதல் செய்வதில்லை என்றும், நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மழையில் நனைந்து  முளைத்து வருகிறது என்றார். திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்ட 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக மக்களை ஏமாற்றுகிறது என்று வேதனை பொங்க தெரிவித்தார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here