சென்னை, ஏப். 29 –

இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகிவுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில், இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசு சார்பாக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்தார்.

அத்தீர்மானத்தில் இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகிவுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் அத்யாவசியப் பொருட்களை தமிழக அரசு வழங்கிட முடிவெடுத்து, சட்டமன்ற பேரவையில் அதற்கான தனித்தீர்மானம் முதலமைச்சரால் முன் மொழியப்பட்டது.

குறிப்பாக அத்யாவசியப் பொருட்களான ரூ. 80 கோடி மதிப்பீட்டிலான 40 டன் அரிசி, அதேப்போல் உயிர்காக்க கூடிய ரூ.28 கோடி மதிப்பிலான 137 வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்க ரூ. 15 கோடி மதிப்பிலான 500 டன் பால்பவுடர் என்பது போன்ற  அத்யாவசியப்பொருட்களை இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் நாம் வழங்க நினைக்கிறோம். இருப்பினும் இதனை மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது.

ஒன்றிய அரசின் அனுமதியோடு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வழியாகத்தான் வழங்க வேண்டும் என்பதால் ஒன்றிய அரசின் அனுமதி கோரி இத்தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சர் தீர்மானத்தை முன் மொழிந்து உரையாற்றும் போது இலங்கையில் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டதுமே, இந்திய அரசிடம் இது குறித்து தான் கோரிக்கை வைத்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இதுக்குறித்து கடந்த மார்ச் 31 – 2022 அன்று டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து, அவரிடமும் வலியுறுத்தியுள்ளேன் என்றும் அதனைத்தொடர்ந்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரை தொலைப்பேசியில் தொடர்ப்புக் கொண்டும் அவரிடம் கோரிக்கை வைத்தேன், மேலும் அவருக்கு இது தொடர்பாக நடப்பு மாதம் 14 – 2022 அன்று கடிதம் எழுதி நினைவூட்டிருக்கிறேன் இருப்பினும் அதுக்குறித்து இதுநாள் வரை எந்த தகவலும் இல்லை என்றும் இலங்கையில் தற்போது நிலைமை மிக மோசமடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் திறக்குறளில் வள்ளுவர் கூறிய குறளான உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்பதை சுட்டிக்காட்டி, உதவி என்பதும் மனிதாபிமான அடிப்படையில் உடனடி உதவியாக இருக்க வேண்டும் காலத்தே செய்தால்தான் அது உதவி இதனைத்தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். அந்த எண்ணத்தின்  வெளிப்பாட்டை  ஒன்றிய அரசுக்குச் சொல்லக்கூடிய வகையில் ஒரு தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புவது காலத்தின் கட்டாயம் என்று தமிழக அரசு கருதுகிறது. அதனடிப்படையில் இத்தீர்மானத்தை முதலமைச்சர் முன் மொழிவதற்கு கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தீர்மானம்

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு தமிழ்நாடு அரசு அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பால், முதலிய அத்யாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கக்கூடிய மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்கத்தயராக உள்ளது என்றும், இதற்கு ஒன்றிய அரசு தேவையான அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசிற்கு ஏற்கனவே மாநில அரசு கடிதம் எழுதியிருக்கிறது, எனினும் இதுக்குறித்து ஒன்றிய அரசிடமிருந்து எந்தவிதமான தெளிவான பதிலும் இது வரை பெறப்பெபடாத நிலை உள்ளது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய மக்களுக்கு உதவிடக்கூடிய வகையில் உணவு மற்றும் அத்யாவசிய மருந்துப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது. இந்த தீர்மானத்தை கட்சி எல்லைகளைக் கடந்து கருணை உள்ளத்தோடு அனைவரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here