பொன்னேரி, செப். 1 –
தேர்தல் வாக்குறுதியின் படி உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சோழவரம் அருகே 41 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா சோழவரம் ஒன்றியம் பண்டிகாவனூர் ஊராட்சியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கு உட்பட்ட 41 நபர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முலம் இலவச வீட்டு மனைப் பட்டாக்களை அவர்களது வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வருவாய்த் துறையினர் வழங்கினர் .
இந் நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு பேசிய தாவது தற்போது தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் வீட்டு மனைப் பட்டாக்களை உடனே வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன் படி பொன்னேரி தொகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க நானும் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் எம்எல்ஏ கூறினார். இந் நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் செல்வம், பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன், சோழவரம் ஒன்றியக் குழு பெருந்தலைவர் ராசாத்தி செல் வசேகரன், திமுக ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், ஒன்றிய கவுன்சிலர் சாராதா ரவி, கனிமொழி சுந்தரமூர்த்தி அருமந்தை ஞாயிறு மொழியரசி செல்வம், சின்னம்பேடு சந்துரு என்கின்ற சந்திரசேகர், ஆண்டார் குப்பம் நாகராஜ், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளரும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான வெ.ரத்தினகுமாரி, வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர் மலர்விழி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதி நிதி விச்சூர் சகாதேவன் நன்றி கூறினார்.