திருமுல்லைவாயில் பகுதியில் ஆட்டோவைத் திருடிய மூவரை கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்து ஆட்டோவை பறிமுதல் செய்து புழல் சிறையில் குற்றவாளிகளை அடைத்தனர்.
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
திருமுல்லைவாயில், செப். 2 –
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் 10 வது தெருவில் வசிப்பவர் பாபு (32) ஆட்டோ ஓட்டுனர் அவரது ஆட்டோவை கடந்த 20.தேதி இரவு சவாரி முடித்து விட்டு அவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்துள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ திருட்டுப் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கம் மற்றும் அப் பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தும், தேடியும் பார்த்துள்ளார். ஆட்டோ எங்குத் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் கடந்த 28.08.21 தேதி திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த காவலர்கள் இன்று 2.9.21 காலை 09.00 மணி அளவில் அம்பத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மௌனசாமி மடம் தெருவில் உள்ள வாகனங்களுக்கு ஸ்ட்டிக்கர் ஒட்டும் கடையில் நம்பர் பிளேட் மாற்றுவதற்காக திருடுப் போன ஆட்டோ அங்கு வந்து இருப்பதாக திருமுல்லைவாயல் காவல் உதவி ஆய்வாளர் பழனி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உடன் சில காவலர்கள் துணையுடன் சம்பவ இடம் சென்று ஆட்டோவை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் திருமுல்லைவாயில் எஸ் எஸ் நகரை சேர்ந்த டிரைவர் ஜீவா (25), அம்பத்தூர் இந்தியன் பாங்க் காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனுசாமி (28), அம்பத்தூர் மேனாம்பேடு சேர்ந்த டிரைவர் பாலாஜி (27) எனத் தெரிய வந்தது. அவர்கள் மூவரையும் கைது செய்து, காவல் நிலையம் கொண்டு வந்து மேலும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் மூவரும் வேறு இதுப்போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடு பட்டுள்ளார்களா , வேறு எங்கெங்கு இதுப் போன்று வாகனங்களை திருடிவுள்ளார்கள். வேறு காவல் நிலையங்களில் இவர்கள் மீது வழக்குகள் உள்ளதா, வேறு எந்த குற்றச் செயல்களிலாதவது இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது போன்ற விசாரணைகளை மேற்கொண்டு அவர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்து நடவடிக்கை மேற் கொண்டனர்.