தூத்துக்குடி:

தூத்துக்குடியில் நேற்று நடந்த தி.மு.க. கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்றால் கனிமொழி பேச முடியுமா? என்று பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டு உள்ளார். கனிமொழி பேசுவதற்கு உரிமை நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பெரியார், அண்ணா பெற்றுத் தந்து இருக்கக் கூடிய உரிமை. இதில் கை வைக்கக் கூடிய அதிகாரம் பா.ஜனதாவுக்கு கிடையாது.

இங்கே மேடையில் இருக்கும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து தலைவர்களும், தி.மு.க. என்ற மாபெரும் இயக்கமும் என்னுடன் உள்ளது. ஆகையால் என்னுடைய கருத்து சுதந்திரத்தை பற்றி நான் பேசவில்லை. மாணவி சோபியாவின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டதே? அதைப்பற்றி கேட்கிறேன். பா.ஜனதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் எத்தனையோ பேர் கைது செய்யப் பட்டு இருக்கிறார்கள். இந்த நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அரசியல் வாதிகள் எந்த அளவுக்கு பாதிக்கப் படுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here