காட்டூர், ஆக. 30 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள காட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் 76 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது,
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன், பள்ளியின் தலைமை ஆசிரியர் மரகதம், உள்ளிட்டவர்கள் இவ்விழாவிற்கு தலைமை வகிக்க, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசன், ஒன்றிய கவுன்சிலர் நந்தினி, துணைத் தலைவர் ரேவதி சண்முகசுந்தரம், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் பார்த்திபன், ரமேஷ், முனுசாமி, குணசேகர், உள்ளிட்டவர்கள் முன்னிலையில் வகித்தனர்.
மேலும் அவ்விழாவிற்கு, சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அதானி அறக்கட்டளையின் சார்பில் காட்டூர் ஏரிக்கரையில் 1500 பண விதைகளை நடும் விழாவில் கலந்துக் கொண்டு பனை விதைகள் மற்றும் மண்ணிற்கேற்ற மரக்கன்றுகளை நடும் பணியினை தொடங்கி வைத்தார்.
மேலும், அத்திப்பட்டு புருஷோத்தமன் உள்ளிட்டவர்களும், மேலும் அவ்விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.






















