பொன்னேரி, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் அஇஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கினங்க, மறைந்த முன்னாள் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டம் நடைபெற்றது.
மேலும் அக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமை வகித்தார். மேலும் அதிமுக மருத்துவ அணி செயலாளரும், முன்னாள் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர்.பி.வேணுகோபால் அதிமுக அம்மா பேரவை இணை செயலாளர் பொன்.ராஜா, மீஞ்சூர் ஒன்றிய அதிமுக செயலாளர் நாலூர் முத்துக்குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பி.டி.பானு பிரசாத், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்புமிகு கூட்டத்தில் உரை நிகழ்த்திய அனைவரும் பொன்னேரி தொகுதியில் அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற பணிகளைத் தவிர வேறு எந்த ஒரு சிறப்பான திட்டமும், தற்போது நடைப்பெற்று வரும் திமுக ஆட்சியில் அப்பகுதியில் நடைபெறவில்லை எனவும் மேலும் குன்னம்ஞ்சேரி மேம்பால பணிகள் அதிமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது எனவும், நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளும் அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டது என பெருமிதத்துடன் உரை நிகழ்த்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் நலிந்தோர்களுக்கு தையல் இயந்திரம் இஸ்திரி பெட்டி இருசக்கர வாகனம் உள்ளிட்ட நல திட்டங்களை வழங்கினர். மேலும் பொன்னேரி நகர அதிமுக செயலாளர் செல்வகுமார், பழவை சுமித்ராகுமார், பட்டாபிராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ,சக்கரபாணி, கே.பி .கே.சேகர், ரவிக்குமார் உள்ளிட்ட அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களும், அக்கட்சியினைச் சேர்ந்த திரளான தொண்டர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் மீஞ்சூர் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் ஜி.எஸ். வினோத் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்.