மணப்பாக்கம், ஏப். 10 –
மணப்பாக்கத்தில் உள்ள மெமொரியல் ஆசிரமத்தில் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் மற்றும் ஹார்ட்ஃபுல்னெஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய யோகா பயிற்சி வகுப்பில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிக ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மேலும், இவ் ஆசிரமத்தில் பங்கேற்ற “அனைவருக்கும் தியானம், மற்றும் அனுதினமும் தியானம்” என்ற மூன்று நாள் யோகா பயிற்சி வகுப்பு வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
மேலும், இறுதி நாளான இன்று மாபெரும் யோக கலை குறித்த சொற்பொழிவு நடைப்பெற்றது, இதில் 5 வயது முதல் 80 வயதிற்குட்பட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாகர்கோயில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி பங்கேற்றார். மேலும் நிகழ்ச்சியில் சொற்பொழிவு நிகழ்த்திய மருத்துவர் சுமனா பிரேம்குமார் உடல் ரீதியான பிரச்சனைகள், பணி நிமித்தமான பிரச்சனைகள், குடும்பம் சம்பந்தமான பிரச்சனைகள், பொருளாதார பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு யோக கலை மூலம் எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து விரிவுரை நிகழ்த்தினார்.
மேலும் யோக கலையில் உள்ள யோகாசனங்கள், பிராணாயாமம், முத்திரை ஆகியவைகள் குறித்து யோக நிபுணர்களால் விவாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியின் நிறைவாக யோககலை கேள்விகளு யோகா ஆசிரியர்களால் விரிவான பதில் அளிக்கப்பட்டது. பாரம்பரிய கலையான யோக கலையை வயது பாகுபாடின்றி சிறியவர் முதல் பெரியவர் வரை சேர்ந்து கற்றது கூடி இருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.