திருவாரூர், செப். 20 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, திருக்கொள்ளம்பூதூர் கிராமத்தில் முப்போகம் நெல் விளைய அருள்புரிந்து வரும் சித்தர் இடைக்காடர் அவதாரநாள் 3 ஆம் ஆண்டு திருவிழா நடைப்பெற்றது.
இவ்விழாவினை தொடர்ந்து அருள்மிகு சௌந்தர்ய நாயகி சமேத வில் வாரண்யேஸ்வரர் சுவாமி திருத்தலத்தில் கிராமவாசிகள் பால்குடம் எடுத்துவர சிறப்பு பூஜை , யாகபூஜை , அன்னதானம் என விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருக்கொள்ளம்பூதூர் கிராமத்தில் சித்தர் இடைக்காடர் அவதரித்த நாள் முதல் இன்று வரை இப்பகுதியில் முப்போகம் நெல் விளைவித்து, இக்கிராமத்தைச் சுற்றியுள்ள ஐம்பது கிராமங்களும் செழிப்புடனும், வளமுடன் வாழ்ந்து வருவதால் சித்தர் இடைக்காடர் அவதரித்த இந்நாளை, அவதார திருநாள் விழாவாக கிராம மக்கள் அனைவரும் ஆண்டு தோறும் ஒன்றிணைந்து வெகு சிறப்பாக பூஜைகள் செய்தும், அன்னதானம் வழங்கியும் இவ்விழாவினை கொண்டாடி வருவதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அவரை வேண்டி வணங்குபவர்களுக்கு நவகிரக தோஷங்கள் நீங்கி செழிப்புடன் வாழ அருள் புரிந்து வருவதாக அக் கிராமத்து மக்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். அக்கிராம மக்களின் நம்பிக்கையை மெய் படுத்துவது போலவே, திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளபூதூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 1500 ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் செழித்து நெல்அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர் இடைக்காடர் திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளப்பூதூர் கிராமத்தில் சிவனை தரிசிக்க வருகைதந்தவர் ஆடுகளை மேய்த்து வாழ்ந்து வந்துள்ளார் ,
வெள்ளைஎருக்கம் செடிகள் மட்டுமே இருந்த வறட்சியான கிராமத்தில் ஆடுகள் , சித்தர் இடைக்காடர் உயிர் வாழ்ந்து வருவதை வான்வழி நவநாதசித்தர் நவகிரகங்களிடம் தெரிவித்துள்ளார் ,
சித்தர் இடைக்காடரை காண வருகை தந்த நவகிரகங்களுக்கு எருக்கம் இலையை உணவாக சாப்பிட்ட ஆடுகளின் பாலை வழங்கி அருந்த செய்துள்ளார் ,
நவகிரகங்கள் மயக்கிய நிலையில் சித்தர்இடைக்காடர் இணைந்து இருந்த நவகிரகங்களை ஒவ்வொரு திசைக்கும் தூக்கிவீசி மாற்றி அமைத்தார் ,
நவகிரகங்கள் மாறியநிலையில் பூமியில் மழைபெய்து உயிரினங்கள் வாழ தேவையான அனைத்தும் தோன்றின ,
சித்தரின் ஆற்றலை உணர்ந்த நவகிரகங்கள் சித்தர் இடைக்காடரை வணங்கும் பக்தர்கள் கிரகதோஷங்கள் நீங்கி செழிப்புடன் வாழ்வர் என வரம் அளித்துச் சென்றதாக தலவரலாறு தெரிவிக்கிறது.
பேட்டி- 1,புத்தர், கிராமவாசி
2,ஆர்சி.இராமன், சொற்பொழிவாளர்





















