அம்மையார்குப்பம், டிச. 8 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார்குப்பம் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள காலனியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் 20 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு திடீரென வாந்தி, பேதி போன்ற உடல் உபாதை நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று அப்பகுதியில் பரவாமல் தடுக்கும் விதத்தில், அப்பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் சார்பில் மருத்துவ குழு முகாமிட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நோய் தொற்று பரவாமல் இருக்க சுற்றுச்சூழல் சுத்தப்படுத்துதல் போன்ற ஆரம்ப சுகாதார முன்னேற்பாடுகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கடந்த வடகிழக்கு பருவமழை காரணமாகவும், அதனால் ஏற்பட்ட கழிவுநீர் தேக்கம் மற்றும் மழைநீர் தேக்கத்தாலும் சுகாதார கேடுகள் ஏற்படுத்த கூடிய சூழல் நிலவி வருகிறது. அதனால் கொசு உற்பத்தி மற்றும் நோய்தொற்றுகளை ஏற்படுத்தும் கிரிமிகளால் இந்நிலை உருவாக காரணமாக இருக்க கூடும். எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ்வித தொற்று நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுத்தமான குடிநீரை ஊரக உள்ளாட்சி வழங்கிட உறுதி செய்ய வேண்டும் அதப்போன்று கழிவுநீர் மற்றும் அப்பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை சுத்தப்படுத்தியும் நோய்தொற்று பரவாமல் இருக்கும் விதமாக பிளிச்சிங்க் பவுடர் மற்றும் கொசுமருந்து தெளிப்பான் போன்ற சுகாதார ஏற்பாடுகளை உடனடியாக உள்ளூர் மற்றும் மாவட்ட சுகாதாரத் துறை சார்பாக போர்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.