கும்பகோணம், ஆக. 12 –

கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.

அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு வாண வேடிக்கை நடைப்பெற்றது. இந்நிலையில் அங்கிருந்த அரச மற்றும் மா மரத்திலிருந்த விஷக்கதண்டுகள் பறந்து வந்து, வாணவேடிக்கையை பார்த்துக் கொண்டிருந்தவர்களையும், பால்குடம் எடுக்க காத்திருந்த சுவாமிமலை கலைஞர் காலனியை சேர்ந்த சதாசிவம் மகன் சச்சின் வயது 17, சோமலிங்கம் மகன் ஜெய் சிங்  வயது 46, இவர் சுவாமிமலை பேரூராட்சி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது குழந்தைகள் சாதனா வயது 12, சசிமிதா வயது 8, ஜெயஸ்ரீ வயது 5, பிரசாத் மகன் ஹரிஹரன் வயது 8, ஷங்கர் மகன் ஜெயக்குமார் வயது 18, சுந்தர்ராஜ் மகன் பாலமுருகன், சுப்ரமணியன் மகன் தினேஷ் குமார் வயது 22,  ஆறு குழந்தைகள் உள்பட 24 பேர்களை விஷக்கதண்டு கடித்தது.

உடன் மயங்கிய நிலையில் இருந்த அனைவரையும் உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து. 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரையும், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை பிரிவில், சேர்த்தனர்.

அங்கு அவர்கள் அனைவருக்கும் மருத்துவர் சிகிச்சையளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலயறிந்த கபிஸ்தலம் காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here