செங்கல்பட்டு, ஏப். 23 –
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை நேற்று நாடு முழுவதும் அப்பண்டிகையை இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதனை முன்னிட்டு அப்பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்று வருகிறது. அதில் அவர்கள் குடும்பத்துடன் சென்று தொழுகை மேற்கொண்டு அப்பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும் அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு நத்தம் பகுதியில் உள்ள பள்ளி வாசலில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. அதில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை மேற்கொண்டனர்.
முன்னதாக இப்புனித பண்டிகையை முன்னிட்டு அதிகாலையில் எழுந்த அவர்கள் புத்தாடை அணிந்து கொண்டும், மேலும் அப்பகுதியில் வசிக்கும் ஏழை எளியவர்கள் மற்றும் நலிந்த மக்களுக்கு உதவிகள் செய்து மகிழ்ந்தனர்.
மேலும் தொடர்ந்து பள்ளிவாசலில் சிறப்பு இறை வழிப்பாட்டிற்காக அப்பள்ளி வாசல் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் ஆயிரகணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று, அச்சிறப்பு வழிப்பாட்டில் தொழுகை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் ஒருவருக்கொருவர் கை கொடுத்து கொண்டும், கட்டியணைத்தும் ரமலான் வாழ்த்துகளை மகிழ்வுடன் பகிர்ந்துக் கொண்டனர்.





















