மீஞ்சூர், பிப். 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி ….

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் அடுத்துள்ள புங்கம்பேடு பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் பள்ளியின் மழலைகள் பட்டமளிக்கும் விழா அப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் வெகுச்சிற்பாக நடைபெற்றது.

அவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு  பனை நல வாரிய தலைவர் மற்றும், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் எ. நாராயணன், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் , மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர்  அலெக்சாண்டர், மீஞ்சூர் திமுக பேரூர் செயலாளர் க‌.சு.தமிழ் உதயன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும் இனிதாக நட்ப்பெற்ற அந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும்  காமராஜர் கல்வி அறக்கட்டளை தலைவர்  கரு.கா அன்பழகன், செயலாளர் லிங்கராஜா நாடார், பொருளாளர்  சிவசுப்பிரமணியம்,  துணைத் தலைவர் முனியசாமி நாடார், துணைச் செயலாளர் ஆனந்த சங்கர் நாடார், மற்றும் பள்ளியின் காப்பாளர்  உதயகுமார், மற்றும் டிரஸ்ட்  உறுப்பினர்கள் காளீஸ்வரன்,  சிவசுப்பிரமணியம், சுந்தர்ராஜ்,  கனகவேல் ராஜன் மற்றும் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து அந்நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்தனர்.

முன்னதாக அப்பள்ளியில் கல்வி பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களின் நடனம், கலை நிகழ்ச்சி, சிலம்பம், உள்ளிட்ட பல்வேறு  கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.

மேலும் அந்நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், மீஞ்சூர் பேரூராட்சி 17 வது வார்டு கவுன்சிலர் மோனிகா ராஜேஷ், மீஞ்சூர் காங்கிரஸ் கிழக்கு வட்டார தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன், மீஞ்சூர் நகர தலைவர் அரவிந்தன் உள்ளிட்டவர்களும் மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என திரளானோர் அவ்விழாவில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here