சென்னை, பிப். 20 –

சிற்பி திட்டத்தின் கீழ் உள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆயிரம் மாணாக்கர்களை கல்விச் சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உடற் பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாற்காக வேர்ல்டு யூனியன் ரிக்கார்ட்ஸ் என்ற அமைப்பு உலகச்சாதனை சான்றிதழ் வழங்கியது. அதனை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ மாணவியர்களின் எதிர்காலத்திற்காக சிற்பி எனும் திட்டத்தினை ஆரம்பித்தார். அத்திட்டத்தின் ஒரு பகுதியாக சிற்பித் திட்டத்தின் கீழ் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் ஐந்தாயிரம் பேர்களை, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கடந்த பிப் 17 ஆம் தேதி காலை எழும்பூரிலிருந்து, இரயில் மூலம் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்திற்கு உயற்கையுடன் இணைந்த கல்விச் சுற்றுலாவாக அம்மாணாக்கர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் அந்நிகழ்வினை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு எழும்பூர் இரயில்நிலைத்தில் அம்மாணாக்கர்களின் கல்விச் சுற்றுலாப் பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். அவருடன் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் மற்றும் காவல் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் இப்பயணம் இரயில் மூலம் நடைப்பெற்றதால் சுற்றுச்சூழல் மாசுப்படாமல் இயற்கையை பேணி காக்கும் பயணமாக அமைந்தது இப்பயணத்தின் மேலும் ஒரு சிறப்பாகும்.

தொடர்ந்து வண்டலூர் இரயில்நிலையம் வந்தடைந்த அம்மாணாக்கர்களை பேருந்துகள் மூலம், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்பு அவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை செயல்பாடுகள் குறித்தும், அத்துறை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும் மேலும் காவல்துறையின் பணிகள், கடமைகள், அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் உட்பட அத்துறை சார்ந்த பல்வேறு நிலைகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு அங்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

அக்கல்வி சுற்றுலாப் பயணம் இனிதே முடிந்த நிலையில் நேற்று மாலை மாணவ மாணவியர்கள் வண்டலூரில் இருந்து மீண்டும் இரயில் மூலம் எழும்பூர் இயில் நிலையம் அம்மாணாக்கார்கள் அழைத்து வரப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து அங்கு நடைப்பெற்ற கல்வி சுற்றுலாவன் நிறைவு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிற்பி மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். மேலும் அக்கல்விச்சுற்றுலா பயணம் அனுபவம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் இக் கல்விச்சுற்றுலாவிற்காக ஐந்தாயிரம் பள்ளி மாணாக்கர்களை இரயில் மூலம் அழைத்து சென்றாதற்காக வேர்ல்ட் யூனியன் ரிக்கார்ட்ஸ் அமைப்பினர் சென்னை பெருநகர காவல்துறைக்கு உலக சாதனை சான்றிதழை வழங்குவதாக அறிவித்தனர். அதனை பேரில் அமைச்சர் உதயநிதி அவ்வுலக சாதனை சான்றிதழை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவாலரிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இரயில்வே கூடுதல் காவல் இயக்குநர் வனிதா, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் முனைவர் ஜே. லோகநாதன், இணை ஆணையாளர் முனைவர் பி.சாமூண்டிஸ்வரி, துணை ஆணையாளர்கள் தேஷ்முக் சேகர் சஞ்சய், எஸ் இராதாகிருஷ்ணன், எம். ராம மூர்த்தி, ஆரோக்கியம், கே.சௌந்தராஜன்,மேலும் இரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சிற்பி திட்ட ஒருங்கிணைப்பு பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here