ராமநாதபுரம், நவ. 3- இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சியில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி பெரியபட்டினம் பொது விளையாட்டு மைதானத்தில் துவங்கியது.

மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டியை
PFI
இராமநாதபுரம் மவட்ட தலைவர்  ரியாஸ் கான்  தலைமையில் PFI மாநில செயற்குழு உறுப்பினர்  முகம்மது ரசீன், பெரியபட்டினம் முன்னேற்ற அறக்கட்டளை  தலைவர்  முகம்மது பதிர் ஒசாலி மற்றும் செயலாளர் பேராசிரியர்  காதர் இப்ராகிம் ஆகியோர் முன்னிலையில்  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளரும் தென் மண்டல பொறுப்பாளருமான  அகமது நவவி  துவங்கி வைக்க போட்டி நடைபெற்று வருகிறது. விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கும்  நிகழ்ச்சியில் தொழிலதிபர் அமீன், எஸ்டிபிஐ தொகுதி தலைவர் அசன் அலி, திருப்புல்லாணி ஒன்றிய அமமுக சிறுபான்மை செயலாளர் சாகுல் ஹமீது, தொழிலதிபர் அலி,  மலேசிய தொழில் அதிபர் ஜெகன் , பெரியபட்டினம் மீனவர் கூட்டுறவு சங்க துணை தலைவர் அஸ்கர் அலி, அமமுக பிரமுகர் அப்பாஸ் கான் எஸ்டிபிஐ நகர் தலைவர் முகம்மது மீராசா நகர் செயலாளர் முகம்மது ஆசிக், பெரியபட்டினம் யூசுப் மற்றும் INTJ இராமநாதபுரம் மாவட்ட தலைவர் பக்கீர் ஒலி ஆகியோர் கலந்து கொண்டனர். விளையாட்டுக்கான  ஏற்பாடுகளை பெரியபட்டினம் இளைஞர்களுடன் அன்வர் அலி செய்து வருகிறார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here