சென்னை, பிப். 20 –
தமிழ்நாடு அரசின் சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஏற்றுமதி மற்றும் உறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் குறித்த 2 நாட்கள் இணையவழி கருத்தரங்க பயிற்சியினை எதிர் வரும் பிப்ரவரி 23 முதல் 24 ஆம் தேதி வரை மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தவுள்ளது.
இப்பயிற்சியில் ஏற்றுமதிஇறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் முறைகள், பல்வேறு வகையான போக்குவரத்துக்கள், பலதரப்பட்ட போக்குவரத்து மாதிரி அமைப்புகள் குறித்த அறிமுகங்கள், சுங்கத்துறை முகவர்களின் பணிகள், சரக்கு அனுப்புபவர்கள், கப்பல் முகவர்கள், விமான சரக்கு முகவர்கள், கப்பல் அல்லாத சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள், கொள்கலன் சரக்கு நிலையம் உள்நாட்டு கொள்கலன் டிப்போக்கள் நடத்துபவர்கள், சரக்கு வகைகள், தட்டுப்படுத்தல், கொள்கலன் மயமாக்கல், முழு கலத்தினை – குறைந்த கொள்கலன் ஏற்றுமதி, கப்பல் மற்றும் விமான சரக்கு செயல்பாடுகள், கப்பல் போக்குவரத்து வகைகள், சர்வதேச வர்த்தக விதிமுறைகள் 2020, கப்பல் ஏற்றுமதி சீட்டு விமான வழி ரசீது மற்றும் முக்கிய சேவைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் செயல்முறை சுங்க அனுமதி நடைமுறை அறிமுகம், சுங்க பிணைக்கப்பட்ட கிடங்குகள் மற்றும் அனுமதிக்கு தேவையான ஆவணங்கள் போன்ற ஏற்றுமதிக்கான பல்வேறு செயல்பாடுகள் குறித்தபஃ பயிற்சிகள் அவ் இணையவழி கருத்தரங்கப் பயிற்சியில் நடத்தப்பட இருக்கிறது.
ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு தேர்ச்ச்சிப் பெற்ற அனைவரும் இதில் சேரலாம்.
மேலும் இப்பயிற்சிப்பற்றி கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக் வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழில்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600032 என்ற அலுவலகத்திலோ அல்லது 044 – 22252081 – 22252082 – 96771 52265, 86681 02600 என்ற தொலைப்பேசி வாயிலாகவோ தொடர்புக்கொண்டு உங்கள் சந்தேகம் குறித்த விவரங்களை கேட்டுத்தெரிந்துக் கொள்ளலாம். மேலும் இதில் பங்கேற்க முன்பதிவு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.





















