திருவள்ளூர், சனவரி. 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் …

எதிர் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்பது குறித்து உரிய நேரத்தில் உங்களுக்கு அறிவிப்பு வரும் எனவும், மேலும் தற்போது சில கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி. வி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரில் உள்ளதனியார் திருமண மண்டபத்தில் எதிர் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்ட அமமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைப்பெற்றது.

அக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவிக்கும் போது எதிர் வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் தனக்கு போட்டியிடுவதற்கான எண்ணம் இல்லை என அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் நேற்று அயோத்தியில் நடைப்பெற்ற பாலராமன் திருக்கோயில் கும்பாபிஷேகம் என்பது ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது என்றும் மேலும் அது அனைத்துத் தரப்பினருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதெனவும் அப்போது அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழாவுக்கு மாணவர்கள் அவசியமாக வரவேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சொல்லியது எந்தவித தவறும் இல்லை என்றும், அதிமுகவில் பிரிந்துள்ள அணிகள் ஓரணியில் இணைந்து ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்பது தன்னுடைய தனிப்பட்டக் கருத்தாகும் எனவும்அப்போது அவர் தெரிவித்தார்.

.பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே மகளிர்க்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த முடியாது என்ற  ஒன்றிய அரசின் நிலைப்பாடு அதற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதை  காட்டுவதாக தெரிவித்த டி.டி.வி. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுடன் எந்த காலத்திலும் அமமுக கூட்டணி அமைக்காது எனவும் மேலும். கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை கண்டறிய காவல் துறை முயற்சி மேற்கொண்டு வருவது வெற்றி பெற வேண்டும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார் . முன்னதாக டி.டிவி. தினகரனுக்கு அக்கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு மற்றும் வீர வாள் உள்ளிட்ட நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள். மேலும் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறுக் கேள்விகளுக்கு தொடர்ந்து சலிக்காமல் பதலளித்தார்.

பேட்டி.

 

டிடிவி தினகரன்

அமமுக

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here