விச்சூர், சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர்மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட விச்சூர் முதல் நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று நடைபெற்றது.
அம்முகாமில் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துறை சந்திரசேகர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார். வருவாய் துறை, பேரிடர் மீட்பு, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை உள்ளிட்ட 13 துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்றனர்.
தொடர்ந்து அம்மனுக்கள் மீதான ஆய்வு மேற்கொண்டு அதற்கான உடனடி தீர்வு கண்டு பொதுமக்களிடம் வழங்கினர். மேலும் அம்முகாமில் உள்ளாட்சி பிரதிநிதிகளான சோழவரம் ஒன்றிய குழு தலைவர் ராசாத்தி செல்வசேகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் சகாதேவன், ஆர்.என். ரமேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


















