கும்பகோணம், ஜன. 30 –

கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் தமிழ் மக்கள் கலை விழா எனும் பாரம்பரிய கலை நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது. இதில் திராவிட கழக தலைவர் கலந்து கொண்டார்.

பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலத்தில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான பொய் கால் குதிரை ஆட்டம், பறை இசையுடன் பரதம் , மற்றும் சிலம்பம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி கடந்த 17 ஆண்டுகளாக ஜனவரி மாதம் இறுதியில் இரவு தொடங்கி விடிய விடிய  தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை தமிழ் மக்கள் கலைவிழா என்ற பெயரில் இப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்தோற்று பரவு தடுப்பு நடவடிக்கையின் காரணமாக நடைப்பட்டுயிருந்த நிலையில் தற்போது, நேற்று இரவு விடிய விடிய தமிழ் மக்கள் கலை விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பங்கேற்ற கலைக்குழுவினர் பொய்க்கால் குதிரை ஆட்டம், மற்றும் கண்களை கட்டிக்கொண்டு பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன்  சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டி அசத்தினர்.

மேலும்  திருப்பூரை சேர்ந்த பறை இசை குழுவினர் பறை இசைக்கு தகுந்தார் போல் பரதமும் சிலம்பமும் ஆடியும் அசத்தினார்கள்.

மேலும், தமிழ் மக்கள் கலை விழா நிகழ்ச்சியை காண  அந்நகர சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பான வான வேடிக்கைகளோடு அவ்வூர் மக்கள் வரவேற்பு அளித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here