ராமநாதபுரம், நவ.3
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பிளஸ் 2 க்கு அடுத்து என்ன உயர்கல்வி பயிலலாம் என்ற வழிகாட்டல் கருத்தரங்கு நடந்தது. பி.எஸ்சி  உளவியல் துறை 3 ஆம் ஆண்டு மாணவி சுமையா கிராத் ஓதினார்.கல்லூரி முதல்வர்  எஸ்.சுமையா தலைமை வகித்தார்.  கம்ப்யூட்டர் அறிவியல் துறை உதவி பேராசிரியை ராதா வரவேற்றார். கல்வி உதவித் தொகையுடன் வேலை வாய்ப்பிற்கான உயர் கல்வி குறித்து தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வணிகவியல் துறை உதவி பேராசிரியை எஸ்.பாத்திமா ருஸ்தா பேசினார்.

சென்னை சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் அல்ஹாஜ் காலித் ஏ.கே.புஹாரி வாழ்த்துரை வழங்கினார்.  தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர்  ஆர்.கண்ணதாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது, பிளஸ் 2 முடித்த பின் என்ன படிக்கலாம் என்பது குறித்து நமக்கு தெரிந்தது 5 அல்லது 6 கோர்ஸ்கள்தான். ஆனால் தாசீம்பீவி அப்துல் காதர் பெண்கள் கலை கல்லுாரி கல்வி குழு தயாரித்துள்ள வழிகாட்டுதல் புத்தகத்தில் 5 ஆயிரம் கோர்ஸ்கள் உள்ளது. உண்மையில் இந்த கல்விக் குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும். பொதுவாக பெண்கள் மென்மையானவர்கள், கடமை, பொறுப்பு அதிகம் உள்ளவர்கள். நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும். நான் வேறு கல்லூரி பேராசிரியராக இருந்து இங்கு வந்து பார்த்தவகையில் சொல்கிறேன். இந்த தாசிம்பீவி அப்துல்காதர் கல்லூரியில் அனைத்துவிதமான கல்வியும் கிடைக்கிறது. கல்விக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வைத்துள்ளனர். இங்கு அதிகமான அரசு பள்ளி மாணவிகள் வந்துள்ளீர்கள். உங்களுக்குதான் அதிகம் சொல்ல வேண்டும். நீங்கள் எப்போதும் உங்களுடைய தாய், தந்தை, ஆசிரியர் ஆகியவர்களை மறக்கவே கூடாது.

உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. நீங்களே தடுத்தால்தான் உண்டு. நீங்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி சரியானதாகவே இருக்கும். இந்தளவு அதிகமான கல்வி வசதி உள்ளதை நன்கு பயன்படுத்தி கொள்ளுங்கள், என்றார்.
உயர் கல்வி குறித்து  மாணவியரின் சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள், பேராசிரியைகள் விளக்கம் அளித்தனர். கல்லூரி மாணவியர் பேரவை தலைவி எச்.மரியம் அபிரா நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here