கும்பகோணம், மார்ச். 23 –
கும்பகோணம் அருகே உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருக்கோயில் பூங்காவிற்கு, ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூபாய் 13 லட்சத்தி 79 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன மின்னொளி வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந் நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் சமூக பொறுப்புணர்வு திட்டம் வாயிலாக சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் செய்து வருவதாக மாறன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
யுனஸ்கோ நிறுவனத்தால், உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இத்திருக்கோயிலுக்கும் இதனை சுற்றிலும் உள்ள பூங்காவிற்கும் நவீன மின்னொளி வசதியை ரூபாய் 13 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில், ஓஎன்ஜிசி நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் செய்துள்ளது.
இதற்கான எளிய நிகழ்ச்சி திருக்கோயில் வாயிலில் மாநகராட்சி மேயர் கே சரவணன், துணை மேயர் சு ப தமிழழகன் ஆகியோர் தலைமையிலும் ஓஎன்ஜிசி நிறுவன மேலாளர் பெ நா மாறன், உதவி மேலாளர் அனுராக் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கே.எம்.பி.எப். நிறுவனத்தலைவர் எஸ் கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன மின்விளக்குகளை ஒளியூட்டி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஓஎன்ஜிசி அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் பலரும் உடனிருந்தனர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓஎன்ஜிசி மேலாளர் பெ நா மாறன், கும்பகோணம் அருகே உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருக்கோயில் பூங்காவிற்கு, ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூபாய் 13 லட்சத்தி 79 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன மின்னொளி வசதி, செய்து தரப்பட்டுள்ளது.
மேலும் ஆண்டு தோறும் ஓஎன்ஜிசி நிறுவனம் சமூக பொறுப்புணர்வு திட்டம் வாயிலாக சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளிகளுக்கு தேவையான உள் உபகரணங்கள், பொது மக்களின் குடிநீர் தேவைக்கான மற்றும் விவசாயிகளுக்கான பணிகள் என பலவிதமான பணிகள் செய்து வருவதாக பெ நா மாறன் தெரிவித்தார்.






















