சென்னை, ஆக 5 –
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய எட்டு அடுக்குமாடி குடியிருப்பு 95வது பிளாக்கில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்கள் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதை பார்த்த குடியிருப்பில் வசிப்பவர்கள் தீயை அணைக்க முயன்றனர். தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 வாகனங்களில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்துள்ளனர். குடியிருப்பு வளாகத்தின் கீழ் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்தது குறித்து பெரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.