
கும்பகோணம், டிச.20 –
கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை UDID கார்டு வாங்காதவர்களுக்கும், மேலும் நலவாரியத்தில் பெயர் பதியாதவர்களுக்கும் மற்றும் உபகரணங்கள் தேவைப்படுவோர், வங்கி கடன் பெறுவதற்கு, மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 1,500/- பெற்றுக் கொண்டு இருக்கின்ற கை, கால் பாதிக்கப்பட்ட 75% சதவீதத்திற்கு மேல் பாதிப்புள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ரூபாய் 2,000/- பெறுவதற்கான சான்று வழங்க சிறப்பு முகாம் K.M.S.S சர்ச் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாம் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் பழ. அன்புமணி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநகர துணை தலைவர் இளங்கோவன் மாநகர இணை செயலாளர் ரமேஷ் மாநகர பொருளாளர் ராஜேஸ்வரி மாநகர கிளை மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் முருகபூபதி, நித்யானந்தம், பாரூக், சுல்தான் பர்வீன், மகேஸ்வரி, அறிவழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


















