ராமநாதபுரம், மே 5-
ராமநாத புரத்தில் தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப் போர் நலச் சங்கம் மற்றும் ராமநாத புரம் மாவட்ட இரண்டு சங்கர மோட்டார் வாகனம் பழுதுநீக்குவோர் நலச் சங்கம் இணைந்து நியூ புல்லட் பயிற்சி வகுப்பு நடத்தினர்.
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் அவின் கோ ஓட்டலில் நடைப் பெற்ற ஒரு நாள் நியூ புல்லட் பயிற்சி வகுப்பு முகாமை மாநில செயலாளர் குமார வேலு தலைமை வகித்து வர வேற்றார். திறன் மேம் பாட்டு துறை மாவட்ட திட்ட துணை இயக்குனர் ரமேஷ் குமார் பயிற் சியை துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் வரத ராஜன், மாநில ஆலோசகர் பசீர் அகமது, மாநில துணை தலைவர் ராமர், பயிற்சியில் மாவட்டத் திலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட மெக்கா னிக்கள் பங்கேற்று தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங் களுக்கு பயிற்சி யாளர்களிடம் கேள்வி கேட்டு தங்கள் சந்தேகங்க ளுக்கான விளக்கத்தை கேட்டு தெரிந்து கொண் டனர். முகாமில் சிறந்த முறையில் பழுது நீக்கம் செய்வது குறித்தும், ஆயில் மாற்றும் முறைகள், என்ன வகையான ஆயில் பயன் படுத்தினால் நல்லது போன்ற பல்வேறு சந்தேகங் களுக்கு பதில் அளித்து பயிற்சி வழங்கப் பட்டது. சிவகங்கை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், உட்பட பலர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் கூரிதாஸ் நன்றி தெரி வித்தார்.