காஞ்சிபுரம், மே. 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்…

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ 4-ம் நாள் காலை உற்சவம். வெள்ளி சேஷ வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீதேவி பூதேவியுடன், ஸ்ரீ பரமபதநாதன் திருக்கோலத்தில் காட்சியளித்து வீதி உலா  வந்தார் ஸ்ரீவரதராஜ பெருமாள்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

வைகாசி பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் காலை உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி, வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, மஞ்சள்,நீலம் நிற பட்டு உடுத்தி மல்லிகைப்பூ, பஞ்சவர்ணபூ மலர் மாலைகள் திருவாபரணங்கள் அணிவித்து, ஸ்ரீ பரமபத நாதன் திருக்கோலத்தில்,வெள்ளி சேஷ  வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.

பின்னர் மேளதாள, பேண்ட், வாத்தியங்கள், முழங்க, வேதப்பாராயண கோஷ்டியினர் பாடிவர, ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் வெள்ளி சேஷ வாகனத்தில், பாதம் தங்கிகள் தூக்கிச் செல்ல காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here