கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு குடியரசு கட்சி வீரத்தமிழர் கட்சி சார்பில் டெல்லியில் போராடுகின்ற விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்துவதை உடனே நிறுத்த வலியுறுத்தி மத்திய அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் டெல்லியில் போராடுகின்ற விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும்தில்லி விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அளிக்க கோரியும். கா்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் திரும்பப் பெற கோரியும். பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் ஆந்திர அரசின் முயற்சியை தடுக்க நீதிமன்றத்தில் தடையாணை பெற கோரியும். தமிழ்நாடு அரசு உரித்த தேங்காய்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். பாமாயில் உள்ளிட்ட எண்ணெய்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதைக் கைவிட்டு அனைத்து உபயோகத்துக்கும் தேங்காய் எண்ணெய்களைப் பயன்படுத்தும் நடைமுறையைக் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு குடியரசு கட்சி, மற்றும் வீரத்தமிழர் கட்சி சார்பில் காந்தி பூங்கா முன்பு தமிழ்நாடு குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் ராஜசேகர், தலைமையில் நடைபெற்றது.
இதில் நிறுவனத் தலைவர் எழிலன், வீரத்தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் சிலம்பரசன், மாவட்ட செயலாளர் அன்பரசன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவளவன், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் புரட்சி ராமன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.





















