தஞ்சாவூர், ஏப். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..

தமிழ்நாட்டிற்கு தேவையான வளர்ச்சித்திட்டங்களை உரிமையோடு பெற வேண்டுமெனில் பாஜவிற்கு வாக்களியுங்கள். என தனது தேர்தல் பிரச்சாரத்தில் அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன் வாக்களர்களிடம் முன் மொழிந்தார்.

தஞ்சாவூர் மக்களவை தொகுதி பாஜக  வேட்பாளர் கருப்பு. முருகாணந்தத்தை  ஆதிரித்து ஒரத்தநாடு அண்ணாசிலை அருகில் அவர் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், காலத்தின் சதியால் நாங்கள் பிரிந்து இருந்தோம், தற்போது ஒன்று சேர்த்து விட்டோம் இனிமேல் எங்களை யாரும் பிரிக்க முடியாது. இந்த தேர்தலில் பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

பாஜக முக்கிய தலைவர்கள் பல இடங்களில் போட்டியிடுகிறார்கள். ஆனால் பழனிச்சாமி அணியில் முக்கிய தலைவர்கள் போட்டியிடவே பயப்படுகிறார்கள். மேலும் தமிழகத்தில் மோடிக்கு ஆதரவாக அலை வீசுவதாக அவர் அப்போது தெரிவித்தார்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் அவர்களுக்கு எதிரான அலைதான் தற்போது தமிழகத்தில் வீசுவதாகவும் தெரிவித்தார். அதனால் திமுகவிற்கு எதிரான வாக்குகள் பாஜகவிற்கு வந்து சேரும். எனவும் மேலும் அதனை பாஜகவிற்கு கிடைக்காதவாறு தடுப்பதற்கும் வாக்குகளை பிரிப்பதற்காகவும் திமுகவுடன் ரகசிய கூட்டணி வைத்துக் கொண்டு பழனிச்சாமி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.என குற்றம் சாட்டினார்.

திமுகவிற்கு எதிராக கட்சி ஆரம்பித்தார் எம்ஜிஆர். இன்று அதே திமுகவிற்கு ஆதராவாக செயல்படுகிறார் துரோகி பழனிச்சாமி. இவர்களின் இத்தகைய செயலால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 3 வது இடத்திற்கு தள்ளப்படும் என்றார்..

நான் தஞ்சாவூரில் போட்டியிடவே பெரிதும் விரும்பினேன்.  காரணம் தஞ்சாவூர் திமுக கோட்டை என்று கூறினார்கள். கோட்டையில் மோதிதான் பார்ப்போமே என்று நினைத்தேன். இருந்தாலும் நான் தஞ்சாவூரில் போட்டியிட கூட்டணி கட்சியிடன் வற்புறுத்தவில்லை. ஆகையால்தான்  இந்த தொகுதியில் பாஜகவின் உண்மையான தொண்டான இருந்த கருப்பு முருகாணந்தம் போட்டியிடுகிறார்.

அதிமுகவை மீட்டு ஒபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர்களிடம் ஒப்படைத்து விட்டு ஆட்சியை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடுவேன். எங்கள் அமமுக கூட்டணியில் இடம் பெறும்.  அதிமுகவை மீட்டெடுக்க தாமரையில் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை உரிமையோடு பெற்றுக் கொள்ள பாஜவிற்கு வாக்களியுங்கள் என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here