காஞ்சிபுரம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், தமிழகத்தில் திமுக அரசு அமைந்த கடந்த 32 மாத காலத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. எனவும் மேலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போதை பொருட்களை புழக்கத்தில் விடுகின்ற கும்பலை அந்நாட்டு காவல்துறை தேடி வந்த நிலையில், அவர்கள் இந்தியாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, டெல்லியில், சிறப்பு போலீஸ் அமைப்புடன் நடத்திய சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள். அது மட்டுமின்றி அவர்களின் தலைவனாக செயல்பட்டவர் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக் என்ற செய்தி தமிழக மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அரசியல் பின்புலத்தை வைத்துக் கொண்டு ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தமிழகத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலை குனிவாகும். மேலும் அவ்விளைவின் காரணமாக தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து அதிமுகவின் இளைஞர் பாசறை, பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர்அணி ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில் இன்று காலை10 மணிக்கு வருவாய் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் அதிமுக தலைக் கழகம் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அதன் பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் அதிமுக இளைஞர் அணி மற்றும் இளம் பெண் பாசறை மற்றும் மாணவரணி சார்பில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில அரசுக்கு எதிராகவும், போதை பொருள் ஒழிப்பு குறித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.





















